Local

மக்கள் மீது எல்லையற்ற சுமைகள்; IMF நிபந்தனைகளை தளர்த்துவோம் கண்டியில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் தெரிவிப்பு

Saturday, 17 August 2024 - 8:33 am

மக்கள் மீது எல்லையற்ற சுமையை சுமத்தியுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை தளர்த்துவதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்படுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இன, மதம், கட்சி வேறுபாடின்றி மக்களை மையமாகக் கொண்ட சிறந்த அரச சேவையை செயல்படுத்த உறுதிமொழி எடுப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்களை கையளித்த பின்னர் நேற்று (16) கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்று வழிபட்ட எதிர்க்கட்சித் தலைவர் ஊடகங்களுக்கு

கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மல்வத்து அஸ்கிரி மகாநாயக்கர்களை தரிசித்து ஆசிர்வாதம் பெற்ற சஜித் பிரேமதாச, கண்டி நாத தேவாலய வளாகத்தில் மகா சங்கத்தினரால் நடாத்தப்பட்ட ஜயபிரித் கீர்த்தனையிலும் கலந்துகொண்டார் அதன் பின்னர் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், “மதுபான அனுமதி உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கி மக்களை கவரும் வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், ஆட்சிக்கு வந்தவுடன் அரசியல் சூதாட்ட கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பேன்” எனவும் தெரிவித்தார். மக்களை துன்பங்களிலிருந்து விடுவித்து வளமான மற்றும் சட்டத்தை மதிக்கும் நாட்டை உருவாக்குவதே தனது நோக்கம் என்றும் அவர் வலியுறுத்தினார். மக்கள் மீது இயன்றளவு சுமையை ஏற்றிவிட்டு நாடு வழமைக்கு திரும்பியுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பதாகவும், இது ஒரு புதிய நியாயப்படுத்தல் எனவும் உற்பத்திப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து, முதலீடும், சேமிப்பும் செய்ய முடியாத சூழ்நிலையில் மக்கள் ஆதரவற்ற நிலையில் இருப்பதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.


Top Stories
wedivistara

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்!

wedivistara

அமைச்சர் விஜிதவுக்கு பொருளாதாரம் தெரியவில்லை

wedivistara

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கைது

wedivistara

வரப்பிரசாதங்களை நீக்க வேண்டாம்!

wedivistara

அமைச்சர்களுக்கு இனி கொழும்பில் வீடில்லை!

wedivistara

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி நிலைநாட்டப்படும் - ஜனாதிபதி அநுர கட்டுவாபிட்டியில் உறுதியளிப்பு

Trending
wedivistara

அமைச்சர்களுக்கு இனி கொழும்பில் வீடில்லை!

wedivistara

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கைது

wedivistara

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்!

wedivistara

வரப்பிரசாதங்களை நீக்க வேண்டாம்!

wedivistara

அமைச்சர் விஜிதவுக்கு பொருளாதாரம் தெரியவில்லை


NEWS ALERT