ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (29) வெளியிடப்படவுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தரான சுஜீவ சேனசிங்க தெரிவிக்கையில், இது தொடர்பான கொள்கைப் பிரகடனத்தின் அனைத்து திட்டங்களும் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் ஒரே நாட்டில் அதிகபட்ச அதிகாரப் பகிர்வு என்ற கொள்கை அமுல்படுத்தப்படுமென, கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச திருகோணமலையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.