Local

நாட்டின் அபிவிருத்திக்கு சர்வதேச நன்கொடையாளர் மாநாடு ஜனாதிபதியானதும் நடத்துவேன் என்கிறார் சஜித்

Tuesday, 03 September 2024 - 1:20 pm

வடக்கு மாகாண மக்கள் யுத்தத்தினால் அதிகமாக பாதிக்கப்பட்டார்கள். யுத்தம் இடம்பெற்ற நாடுகளில் யுத்தத்தின் பின்னர் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை கட்டியெழுப்புவதற்காக சர்வதேச நன்கொடையாளர் மாநாடு கூட்டப்படுகின்றது. என்றாலும் எமது நாட்டில் யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் நிறைவடைந்த போதும், எந்த ஒரு தலைவரும் அவ்வாறான நன்கொடையாளர் மாநாட்டை கூட்டுவதற்கு

நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த மாநாட்டின் ஊடாக கிடைக்கின்ற உதவிகளை வட,கிழக்கு மாத்திரமல்லாமல் முழு நாட்டையும் அபிவிருத்தி அடையச் செய்வதற்கு பயன்படுத்த முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட,கிழக்கு மாகாணங்களை மையமாகக் கொண்டு சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை நடாத்துவதோடு, அதன் ஊடாக வட,கிழக்கு மாகாணங்கள் மாத்திரமல்லாமல் முழு நாட்டையும் அபிவிருத்தி அடையச் செய்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேசத்தில் தேர்தல் காரியாலயத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்று முன்தினம் பங்கேற்று உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

அதேபோன்று ஒரே நாட்டிற்குள் உச்சபட்ச அதிகாரத்தை பகிர்ந்து, அரசியல் ரீதியாக வளப்படுத்துவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

# மாகாண சபை தேர்தல் நடத்தப்படும்.

மாகாண சபைகளின் அதிகாரங்களை அரசாங்கம் பறித்திருக்கின்றது. அது இடம்பெறக் கூடாது. மத்திய அரசாங்கத்தினாலும், மாகாண சபைகளின் ஊடாகவும், உள்ளூராட்சி மன்றங்களின் ஊடாகவும் இடம்பெற வேண்டிய அபிவிருத்திகளை முன்னெடுக்க தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவற்றின் அதிகாரங்களை பறிக்கக் கூடாது. வட மாகாண சபை இல்லாமல் இருக்கின்றது. அதனால் வட, கிழக்கு பிரதேசங்கள் உட்பட நாட்டின் ஏனைய அனைத்து பிரதேசங்களுக்கும் குறுகிய காலத்துக்குள் மாகாண சபை தேர்தலை நடத்தி அதன் ஊடாக அபிவிருத்தி வேலை திட்டங்களை முன்னெடுப்பதற்கான சந்தர்ப்பத்தை பெற்று தருவேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


Top Stories
wedivistara

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்!

wedivistara

அமைச்சர் விஜிதவுக்கு பொருளாதாரம் தெரியவில்லை

wedivistara

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கைது

wedivistara

வரப்பிரசாதங்களை நீக்க வேண்டாம்!

wedivistara

அமைச்சர்களுக்கு இனி கொழும்பில் வீடில்லை!

wedivistara

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி நிலைநாட்டப்படும் - ஜனாதிபதி அநுர கட்டுவாபிட்டியில் உறுதியளிப்பு

Trending
wedivistara

அமைச்சர்களுக்கு இனி கொழும்பில் வீடில்லை!

wedivistara

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கைது

wedivistara

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்!

wedivistara

வரப்பிரசாதங்களை நீக்க வேண்டாம்!

wedivistara

அமைச்சர் விஜிதவுக்கு பொருளாதாரம் தெரியவில்லை


NEWS ALERT