Local

கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட யுவதி; விளக்கமறியல் மேலும் நீடிப்பு - பிணை விண்ணப்பத்தை நிராகரித்த நீதிமன்றம்

Friday, 02 August 2024 - 10:37 pm

சேருவில – தங்கநகர் யுவதியின் படுகொலை தொடர்பான வழக்கு இன்று (02) விசாரணைக்காக மூதூர் நீதிமன்ற நீதிபதி திருமதி தஸ்னீம் முகமட் பௌசான் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த ஏழு சந்தேகநபர்களையும் எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கில் எதிராளிகள் சார்பில் முன்னிலையாகிய சட்டத்தரணிகள் 3ஆம், 6ஆம் எதிரிகளுக்கு பிணை விண்ணப்பம்கோரி சமர்ப்பணம் செய்திருந்தனர்.

குறித்த விண்ணப்பத்தை நிராகரித்த நீதிபதி குறித்த எதிரிகள் தொடர்பான விசாரணைகள் இன்னும் முடிவுக்கு கொண்டுவரப்படவில்லை எனவும் பிணை விண்ணப்பமானது உயர் நீதிமன்றத்தினாலேயே பரிசீலிக்க முடியும் எனவும் தெரிவித்து பிணை விண்ணப்பத்தினை நிராகரித்து குறித்த சந்தேகநபர்களுக்கு மேலும் 14 நாட்களுக்கு விளக்கமறியலை நீடித்து உத்தரவிட்டுள்ளார்.

சேருவில பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தங்கநகரைச் சேர்ந்த 25 வயதான நடேஸ்குமார் வினோதினி என்ற இளம் பெண்ணின் சடலம் கிளிவெட்டி கிராமத்தின் ஒதுக்குப்புறமாகவுள்ள பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து கொலைசெய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த யூலை மாதம் 5ஆம் திகதி தோண்டி எடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த யுவதியின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான குறித்த யுவதியின் காதலன், அவரது தந்தை, சகோதரி, சிறிய தந்தை, வீட்டு வேலைக்காரன் மற்றும் JCB வாகனத்துடன் தொடர்புடைய இருவர் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கபப்ட்டுள்ளனர்.

குறித்த வழக்கானது, கடந்த ஜூலை மாதம் 19ஆம் திகதி வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது, வழக்கு தொடுனரான மூதூர் பொலிஸார் கைது செய்யப்பட்ட 7 பேரில் 4 பேரை குறித்த வழக்கில் இருந்து விடுவிக்குமாறு சமர்ப்பணம் செய்திருந்தனர்.

முதலில் திருப்தி கொள்ளாத நீதிமன்றம் குறித்த வழக்கை திருகோணமலை மாவட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு மாற்றியிருந்ததோடு குறித்த 7 நபர்களுக்கும் 14 நாட்களுக்கு விளக்கமறியலை நீடித்து உத்தரவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.


Top Stories
wedivistara

எமது பொருளாதாரக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண தேவையான பொருளாதார நிகழ்ச்சி நிரலை இந்த புத்தாண்டில் நடைமுறைப்படுத்த தயாராக உள்ளோம்.

wedivistara

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்!

wedivistara

அமைச்சர் விஜிதவுக்கு பொருளாதாரம் தெரியவில்லை

wedivistara

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கைது

wedivistara

வரப்பிரசாதங்களை நீக்க வேண்டாம்!

wedivistara

அமைச்சர்களுக்கு இனி கொழும்பில் வீடில்லை!

Trending
wedivistara

எமது பொருளாதாரக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண தேவையான பொருளாதார நிகழ்ச்சி நிரலை இந்த புத்தாண்டில் நடைமுறைப்படுத்த தயாராக உள்ளோம்.


NEWS ALERT