தமிழர் தரப்பு பொது வேட்பாளர் பா. அரியநேத்திரனின் தேர்தல் விஞ்ஞாபனம் நேற்று (03) செவ்வாய்க்கிழமை யாழ்.நகரில் வெளியிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ்த் தேசிய பொதுக் கூட்டமைப்பின் அலுவலகத்திலேயே இந்த தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு நடைபெற்றது. தென்னிலங்கை வேட்பாளர்களை நிராகரித்து தமிழ்ப் பொதுவேட்பாளரினூடாக தமிழர்கள் தேர்தலை எதிர்கொள்வதற்கான அவசியம், புறநிலை, முக்கியத்துவம் என்பவற்றையும் தமிழர்கள் தேசமாக தமது நிலைப்பாட்டை அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்களில் ஆணித்தரமாக வெளிப்படுத்தும் வகையில் தமிழ் பொது வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன், தமிழ்த் தேசிய பொதுக்கூட்டமைப்பினரால் ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். இந் நிலையிலேயே, பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் நேற்று (03) வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.