இந்நிகழ்வில், மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுலக்ஷனா ஜயவர்தன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றியதுடன், மைல்கல்லை நோக்கி இட்டுச் சென்ற இந்த கூட்டு முயற்சி தொடர்பில் தாம் பெருமையடைவதாக தெரிவித்தார். பொதுமக்கள், சேவை வழங்குநர்கள், தனியார் துறை பங்காளிகளின் கூட்டுப் பங்களிப்பு மூலம், 2025ஆம் ஆண்டுக்குள் தேசிய மின்கட்டமைப்பில் 1,000 MW சூரிய மின்சக்தியை இணைக்கும் இலக்கு மேம்பட்டுள்ளதாக அவர் இங்கு தெரிவித்தார்.
அவர் இங்கு தெரிவிக்கையில், “சவால்கள் எதிரே உள்ளன. ஆனால் ஒன்றாக, புதிய முயற்சிகள் மற்றும் ஒத்துழைப்புகள் யாவும் இச்செயன்முறையை வலுப்படுத்தும் என நான் நம்புகிறேன். ” என்றார்.