சுற்றுச்சூழல், சமூக மற்றும் ஆளுகை (ESG) திட்டப்பணிக்கான வங்கியின் அர்ப்பணிப்புக்காக சர்வதேச அங்கீகாரத்தை ஏற்படுத்தி வரும் யூரோமனி விருதுகள் நிகழ்வில் (Euromoney Awards for Excellence) இலங்கையின் கொமர்ஷல் வங்கி 2024 ஆம் ஆண்டில் ‘ESG க்கான இலங்கையின் சிறந்த வங்கி’ஆக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
வங்கியின் கிளை வலையமைப்பு முழுவதும் ESG திட்டப்பணியின் சிறந்த நடைமுறைகளை மேம்படுத்துவதற்கும் கண்காணிப்பதற்கும் வங்கியால் செயல்படுத்தப்பட்ட பல உள்ளக மற்றும் வெளியக முயற்சிகள் மற்றும் செயல்முறைகளினை அங்கீகரிக்கிறது.
ஆற்றல்-திறனுள்ள செயல்பாடுகள் ஊடாக சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைத்தல், அதன் கார்பன் தடத்தைக் குறைத்தல் மற்றும் பசுமையான எதிர்காலத்தை ஆதரிப்பதற்காக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கு நிதியளித்தல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிப்பதாக வங்கி தெரிவித்துள்ளது.
கொமர்ஷல் வங்கி நிதியியல் உள்ளடக்கம் பாலின சமத்துவம் மற்றும் சமூக அபிவிருத்தித் திட்டங்களை ஆதரிப்பதன் மூலம் சமூக நிலைப்பேற்றினை தீவிரமாக ஊக்குவிக்கிறது.
உதாரணமாக வங்கியின் மகளிர் வங்கி முயற்சியானது பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு தேவையான நிதியியல் கருவிகள், வளங்கள் மற்றும் பயிற்சிகளை வழங்குவதன் மூலம் அவர்களை வலுப்படுத்துகிறது. மேலதிகமாக இலக்கிடப்பட்ட சமூக திட்டங்கள் மற்றும் பங்குடைமை மூலம் பின்தங்கிய சமூகங்களை மேம்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன்செயற்படுவதாக வங்கி தெரிவித்துள்ளது.