Local

வாழ்வாதாரம் பாதிப்பதால் போராட்டங்களை கைவிட்டு தொழிலுக்கு செல்லுங்கள் - தொழிலாளருக்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் அறிவிப்பு

Monday, 29 July 2024 - 9:45 am

வேலைநிறுத்த போராட்டம் காரணமாக தங்களுடைய தொழில் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் அனைவரும் போராட்டங்களை கைவிட்டு வேலைக்கு செல்லுமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தோட்டத் தொழிலாளர்களுக்கு அறிவித்துள்ளார்.

பெருந்தோட்ட கம்பனி ஒன்றின் கீழ் இயங்கும் நானுஓயா உட ரதல்ல தோட்டத்தில் கடந்த மே மாதம் தேயிலை காணியில் கோப்பி பயிரிடப்பட்டதை எதிர்த்து தோட்ட முகாமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மூன்று தலைவர்களையும் தோட்ட நிர்வாகம் பதவி நீக்கம் செய்தது.

இவ்விடயம் எனது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டதையடுத்து உடனடியாக நான் களத்துக்கு சென்று நடவடிக்கைகளை மேற்கொண்டதனால் குறிப்பிட்ட தோட்ட முகாமையாளரினால் எனக்கெதிராக வழக்கு தொடரப்பட்டதன் காரணமாக சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது. இச்சம்பவம் தொடர்பாக கேள்வியுற்று அனைத்து பொதுமக்கள் சார்பாகவும் குறிப்பிட்ட பெருந்தோட்டக் கம்பனிக்கு எதிராக தொடர்ச்சியாக அடையாள வேலை நிறுத்தத்தை மேற்கொண்டு வருகின்றீர்கள்.

வேலைநிறுத்த போராட்டம் காரணமாக தங்களுடைய தொழில் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் அனைவரும் போராட்டங்களை கைவிட்டு (26) தொழிலுக்கு செல்லுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

இதுவரை காலமும் போராட்டங்களை மேற்கொண்ட அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்வதோடு, உட ரதலை தோட்டத்தை நிர்வகிக்கும் பெருந்தோட்ட கம்பனியின் செயற்பாடுகளுக்கு எதிராக நாங்கள் எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோமெனவும் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.


Top Stories
wedivistara

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்!

wedivistara

அமைச்சர் விஜிதவுக்கு பொருளாதாரம் தெரியவில்லை

wedivistara

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கைது

wedivistara

வரப்பிரசாதங்களை நீக்க வேண்டாம்!

wedivistara

அமைச்சர்களுக்கு இனி கொழும்பில் வீடில்லை!

wedivistara

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி நிலைநாட்டப்படும் - ஜனாதிபதி அநுர கட்டுவாபிட்டியில் உறுதியளிப்பு

Trending
wedivistara

அமைச்சர்களுக்கு இனி கொழும்பில் வீடில்லை!

wedivistara

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கைது

wedivistara

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்!

wedivistara

வரப்பிரசாதங்களை நீக்க வேண்டாம்!

wedivistara

அமைச்சர் விஜிதவுக்கு பொருளாதாரம் தெரியவில்லை


NEWS ALERT