Local

முரண்பாடுகளை விட்டு தள்ளி தமிழர் தரப்பு பொது வேட்பாளருக்கே தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும்

Saturday, 17 August 2024 - 8:52 am

தமிழ் மக்களின் அடையாளமாக விளங்கும் பா. அரியநேத்திரனுக்கு அனைத்து தமிழர்களும் வாக்களிக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் நேற்று முன்தினம் (15) நடைபெற்ற வேட்புமனு கையளிப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில்,

“தமிழ் பொது வேட்பாளரான பா.அரியநேத்திரன் சங்கு சின்னத்தில் போட்டியிடுகிறார். ஜனாதிபதி தேர்தலில் கட்சி சார்பில் சிந்திக்காமல் தமிழ் மக்கள் சார்பில் சிந்திக்க வேண்டும். இதற்கான கட்டாயம் தற்போது தோற்றம் பெற்றுள்ளது.

கட்சி ரீதியில் முரண்பட்டுக்கொண்டிருக்காமல் தமிழ் மக்களின் எதிர்காலம் குறித்து சிந்தித்து ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும். தமிழ் மக்களின் அடையாளமாக பா.அரியேத்திரனை 89 கட்சி தரப்பினர் தேர்ந்தெடுத்துள்ளனர். இனி அவரை பற்றியோ, அவரின் கட்சி பற்றியோ பேசுவது அவசியமில்லை. தமிழ் மக்களின் அடையாளமாக விளங்கும் அரியநேத்திரனுக்கு சகல தமிழ் மக்களும் வாக்களிக்க வேண்டும்.

தமிழ் வேட்பாளர் விவகாரத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுதியான தீர்மானத்தை எடுக்காமல் இருப்பது மன வருத்தத்துக்குரியது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்கிறார்கள். வெளிப்படையாக இதனை குறிப்பிட்டுள்ளார்கள்.

ஆனால், ஒரு சிறுபான்மை தரப்பினர் இதனை தடுக்கிறார்கள். ஆகவே, இவர்கள் தமது முரண்பாடுகளை விட்டு விட்டு தமிழ் வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இலங்கைத் தமிழரசு கட்சி உறுதியாக தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்பதை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.


Top Stories
wedivistara

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம் நடைபெற்றது

wedivistara

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜிவா ஆகியோருக்கிடையில் நிகழ்நிலை சந்திப்பு

wedivistara

எமது பொருளாதாரக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண தேவையான பொருளாதார நிகழ்ச்சி நிரலை இந்த புத்தாண்டில் நடைமுறைப்படுத்த தயாராக உள்ளோம்.

wedivistara

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்!

wedivistara

அமைச்சர் விஜிதவுக்கு பொருளாதாரம் தெரியவில்லை

wedivistara

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கைது

Trending
wedivistara

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜிவா ஆகியோருக்கிடையில் நிகழ்நிலை சந்திப்பு

wedivistara

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம் நடைபெற்றது


NEWS ALERT