தங்களது கண்காணிப்பினூடாக ஜனாதிபதி தேர்தலில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை உறுதி செய்வதற்கும் நாட்டின் ஜனநாயக செயல்முறைக்கு ஆதரவளிப்பதற்கும் தயாரென வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் ஆணைக்குழுவின் அழைப்புக்கமைய, ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக ரஷ்யா, பிலிப்பைன்ஸ், மாலைதீவு, பூட்டான், நேபாளம் மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட ஆறு நாடுகளின் ஏழு பிரதிநிதிகள் குழு, இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது.
இந்நிலையில், வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பு குழுவினர் நேற்று (19) கொழும்பில் ஊடக மாநாடொன்றையும் ஏற்பாடு செய்திருந்தனர்.
இதன்போது, கண்காணிப்பு குழுவின் தலைவரும் மாலைத்தீவு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருமான ஃபுவாத் தௌஃபீக் குழுவின் பணிகள் தொடர்பாக விளக்கமளித்திருந்தார். நாட்டின் பல்வேறு வாக்களிப்பு நிலையங்களுக்கும் கண்காணிப்பாளர்கள் விஜயம் செய்து, வாக்களிப்பு நடவடிக்கைகளை கண்காணிப்பார்கள் என என தெரிவித்தார். மேலும், வாக்காளர்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துவதற்கு ஏற்ற மற்றும் சாதகமான சூழ்நிலை நிலவுகிறதா? என்பதிலும் கூடுதலான கவனம் செலுத்தப்படும் என அவர் தெரிவத்தார்.