இங்கிலாந்துக்கு எதிராக நேற்று (29) லோட்ஸ் மைதானத்தில் ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் களத்தடுப்பில் ஈடுபட்ட இலங்கை அணி பகல்போசண இடைவேளையின்போது மூன்று விக்கெட்டுகளை சாய்த்தது.
இலங்கை அணி இரண்டு மாற்றங்களுடன் இந்த டெஸ்ட் போட்டியில் களமிறங்கியுள்ளது. முன்வரிசை வீரர் பத்தும் நிசங்க இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் டெஸ்ட் அணியில் களமிறங்கியுள்ளார். குசல் மெண்டிஸுக்கு பதிலே அவர் அணிக்கு திரும்பியுள்ளார். அதேபோன்று வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார, விஷ்வ பெர்னாண்டோவுக்கு பதில் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. துடுப்பெடுத்தாட வந்த இங்கிலாந்து அணியின் முதல் இரு விக்கெட்டுகளையும் 10 ஓவர்களுக்குள் வீழ்த்த இலங்கையால் முடிந்தது.
டான் லோரன்ஸ் 9 ஓட்டத்துடன் லஹிரு குமாரவின் பந்துக்கு ஆட்டமிழந்ததோடு ஒரு ஓட்டத்தை பெற்ற அணித்தலைவர் ஒல்லி பொப்பின் விக்கெட்டை அசித்த பெர்னாண்டோ சாய்த்தார். தொடர்ந்து ஆரம்ப வீரர் பென் டக் 40 ஓட்டங்களுடன் பிரபாத் ஜனசூரியவின் பந்துக்கு ஆட்டமிழந்தார்.
இதன்படி முதல் நாள் ஆட்டம் பகல்போசணத்திற்கு நிறுத்தப்படும்போது இங்கிலாந்து அணி 97 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
இதில் ஜோ ரூட் 206 பந்துகளில் 143 ரன்கள் எடுத்து தனது 33 ஆவது டெஸ்ட் சதத்தை நிறைவு செய்து ஆட்டம் இழந்தார்.
தற்போது கிரிக்கெட் ஆடி வரும் வீரர்களிலேயே அதிக டெஸ்ட் சதத்தை அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 264 இன்னிங்ஸ்களில் 33 டெஸ்ட் சதங்களை அடித்துள்ளார் ஜோ ரூட். இந்தப் பட்டியலில் அடுத்த இடங்களில் கேன் வில்லியம்சன் (32 சதம், 176 இன்னிங்ஸ்), ஸ்டீவ் ஸ்மித் (32 சதம், 195 இன்னிங்ஸ்), விராட் கோலி (29 சதம், 191 இன்னிங்ஸ்), புஜாரா (19 சதம், 171 இன்னிங்ஸ்) உள்ளனர்.
தற்போது கிரிக்கெட் ஆடி வரும் வீரர்களில் அதிக சர்வதேச சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார் ஜோ ரூட். இந்த பட்டியலில் விராட் கோலி 80 சதங்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். ஜோ ரூட் 49 சதங்களுடனும், ரோகித் சர்மா 48 சதங்களோடும் அடுத்த இரண்டு இடங்களில் இருக்கின்றனர்.
BATTING | R | B | 4s | 6s | SR | ||||
---|---|---|---|---|---|---|---|---|---|
Ben Duckett
|
c Kumara b Jayasuriya | 40 | 47 | 4 | 0 | 85.10 | |||
Dan Lawrence
|
c †KNM Fe ando b Kumara | 9 | 22 | 2 | 0 | 40.90 | |||
Ollie Pope (c)
|
c de Silva b AM Fe ando | 1 | 10 | 0 | 0 | 10.00 | |||
Joe Root
|
c Nissanka b Rathnayake | 143 | 206 | 18 | 0 | 69.41 | |||
Harry Brook
|
lbw b AM Fe ando | 33 | 45 | 5 | 0 | 73.33 | |||
Jamie Smith †
|
c †KNM Fe ando b Rathnayake | 21 | 57 | 4 | 0 | 36.84 | |||
Chris Woakes
|
c AM Fe ando b Kumara | 6 | 27 | 1 | 0 | 22.22 | |||
Gus Atkinson
|
not out | 74 | 81 | 5 | 4 | 91.35 | |||
Matthew Potts
|
not out | 20 | 33 | 4 | 0 | 60.60 | |||
Extras | (b 8, lb 3) | 11 | |||||||
TOTAL | 88 Ov (RR: 4.06) | 358/7 | |||||||
Yet to bat: Olly Stone,
Shoaib Bashir
|
|||||||||
Fall of wickets: 1-33 (Dan Lawrence, 6.5 ov), 2-42 (Ollie Pope, 9.2 ov), 3-82 (Ben Duckett, 18.4 ov), 4-130 (Harry Brook, 30.5 ov), 5-192 (Jamie Smith, 48.6 ov), 6-216 (Chris Woakes, 58.6 ov), 7-308 (Joe Root, 77.3 ov) • DRS
|
BOWLING | O | M | R | W | ECON | WD | NB |
---|---|---|---|---|---|---|---|
Asitha Fe ando
|
19 | 1 | 84 | 2 | 4.42 | 0 | 0 |
Milan Rathnayake
|
21 | 2 | 80 | 2 | 3.80 | 0 | 0 |
Lahiru Kumara
|
20 | 2 | 75 | 2 | 3.75 | 0 | 0 |
Prabath Jayasuriya
|
25 | 2 | 81 | 1 | 3.24 | 0 | 0 |
Kamindu Mendis
|
3 | 0 | 27 | 0 | 9.00 | 0 | 0 |