ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் வன்முறையை தூண்டியதில்லை. ஆனால், இந்த நாட்களில் வன்முறையை ஏற்படுத்த முயற்சிகள் இடம்பெறுவதாக அநுரகுமார திசாநாயக்க மற்றும் மேலும் சிலர் கூறி வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கடந்த 13 ஆம் திகதி ஹபராதுவ நகரில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது இவ்வாறு அவர்,
இன்று மக்கள் விடுதலை முன்னணியின் வன்முறைகள் மற்றும் மிலேச்சத்தனமான செயற்பாடுகள் காரணமாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் மூடப்பட்டிருக்கின்றது. மக்கள் விடுதலை முன்னணிக்கு எதிரான பல வெகுஜன அமைப்புகளின் கூட்டத்துக்கு இடைநடுவில் புகுந்த மக்கள் விடுதலை முன்னணியினர் தடிகள் பொல்லுகளால் தாக்கியிருக்கின்றார்கள். துப்பாக்கி முனையில் வன்முறையை ஏற்படுத்தி, பேப்பர் துண்டு ஒன்றினூடாக அச்சுறுத்தல் விடுக்கின்ற யுகத்துக்கு அநுரகுமார நாட்டை இட்டுச் செல்ல முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.